செவ்வாய், 27 ஜனவரி, 2009

கடைசி செய்திகள்


இலங்கை நாற்பத்திரெண்டு ஓவரில் நூற்று எண்பத்தி நான்கு ரன்களுக்கு நான்கு விக்கட்டுகளை இழந்தது .
இந்தியா நாற்பத்திரெண்டு ஓவரில் இருநூறு ரன்களை கடந்து வெற்றியை நோக்கி
முன்னேறிகொடிருகிறது .

இந்தியா ஆறு விக்கெட் வித்தியாத்தில் வெற்றி

மஹேந்திரன் கைவண்ணம்





வெற்றியுடன் துவக்குமா இந்தியா : இன்று இலங்கையுடன் முதல் சவால்

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் பார்மில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் தனது அடுத்த சவாலை எதிர் நோக்கி உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தம்புலாவில் நடக்கிறது. முதல் போட்டியிலேயே முத்திரை பதிக்க தயாராக உள்ளது தோனி தலைமையிலான இந்திய படை.

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று தம்புலா சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-0 கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது. இலங்கை அணியும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 கணக்கில் வென்றுள்ளது. இரு அணிகளும் வலுவாக இருப்பதால், இத்தொடரில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



பேட்டிங் படை: சேவக், காம்பிர், சச்சின், தோனி, யுவராஜ், ரெய்னா, ரோகித் சர்மா என வலுவான பேட்டிங் படையை உள்ளடக்கி உள்ளது இந்திய அணி. அனைவருமே நல்ல பார்மில் இருப்பது கூடுதல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிரணிக்கு அச்சுறுத்தலை அளிக்கும் வகையில், ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவின் வேகப்பந்து வீச்சு அமைந்துள்ளது. இவர்கள் தவிர, முனாப் படேல், பிரக்யான் ஓஜா, அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அசத்த உள்ளனர். வலுவான நிலையில் காட்சி அளிக்கும் இந்திய அணிக்கு உள்ள ஒரே குறை, ஹர்பஜன் சிங் இல்லாதது தான்.



சவாலுக்கு ரெடி: இத்தொடர் குறித்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,"" இலங்கை தொடர் மிகவும் சவாலானது. அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது கடினமானது தான். இருப்பினும் கடந்த ஆண்டு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இந்த முறையும் வெற்றிக்கு கடுமையாகப் போராடுவோம். அணியில் ஹர்பஜன் இல்லாதது குறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. "பவர் பிளே' ஓவர்களில் அவரது பந்து வீச்சு அணிக்கு பலமாக அமையும். இருப்பினும் அணியில் பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா என இரண்டு பிரத்யேக சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹர்பஜன் இடத்தை அவர்கள் பூர்த்தி செய்வார்கள்,'' என்றார்.



வெற்றி தொடரும்: இலங்கை அணியை பொறுத்த வரை, ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களை சமீபத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளது. சமீபகாலமாக எழுச்சி நாயகனாக வலம் வருகிறார் தில்ஷன். இத்தொடரிலும் தில்ஷன் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயசூர்யா, ஜெயவர்தனா, சங்ககரா என அனுபவ வீரர்களும் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அணிக்கு மகுடம் சூட்ட தயாராக உள்ளது முரளிதரன், மெண்டிஸ் சுழற் கூட்டணி. இவர்களது பந்து வீச்சை சமாளிப்பது இந்தியாவுக்கு சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. வேகப்பந்து வீச்சிலும் நிறைவாகவே உள்ளது இலங்கை அணி. இத்தொடர் குறித்து பேட்டி அளித்த இலங்கை கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இலங்கை அணி கைப்பற்றியது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி அடை ந்தது. அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இந்திய சவாலை எதிர்கொள்ள முழு வீச்சில் இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர். இலங்கையின் வெற்றி பயணம் தொடரும்,'' என்றார்.



இந்தியா ஆதிக்கம்: இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 106 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில், இந்தியா 55, இலங்கை 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் கைவிடப்பட்டது. சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் மோதிய 37 போட்டிகளில் இந்தியா 25 வெற்றி, 10 தோல்விகளை சந்தித்துள்ளது. இலங்கையில் விளையாடிய 39 போட்டிகளில் 12 வெற்றி, 21 தோல்விகளை பதிவு செய்துள்ளது இந்தியா.



சாதனை நோக்கி முரளிதரன்: ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை படைக்க தயாராக உள்ளார் இலங்கையின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன். தற்போது 500 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள முரளிதரன், இன்னும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (502) சாதனையை தகர்க்கலாம். இன்றைய முதல் போட்டியில் முரளிதரன் இச்சாதனை படைப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.



தம்புலாவில் இதுவரை...:



* தம்புலாவில் இதுவரை இந்தியா, இலங்கை அணிகள் மோதியுள்ள ஐந்து போட்டிகளில் இலங்கை நான்கு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.



* 2004ல் இலங்கை அணி எடுத்த 282 ரன்களே இம்மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். இந்திய அணி கடந்த 2004ல் 270 ரன்கள் எடுத்ததே அதிக ரன்களாக இருக்கிறது.



* குறைந்தபட்ச ரன்னாக கடந்த 2008ல் இந்தியா 146 ரன்கள் எடுத்துள்ளது. இதே ஆண்டு இலங்கை அணி 142 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.



* கடந்த 2004ல் டிராவிட் எடுத்த 82 ரன்களே இந்திய வீரர் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள். 2005ல் ஜெயவர்தனா அடித்த 94 ரன்களே இலங்கை வீரர் எடுத்த அதிகபட்ச ரன்.



அணிகள்: இந்தியா: தோனி (கேப்டன்), காம்பிர், சேவக், சச்சின், யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, இர்பான் பதான், யூசுப் பதான்,ரவீந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா, முனாப் படேல் மற்றும் இஷாந்த் சர்மா.



இலங்கை: ஜெயவர்தனா (கேப்டன்), ஜெயசூர்யா, சங்ககரா, தரங்கா, கபுகேதரா, முபாரக், தில்ஷன், கண்டம்பி, முரளிதரன், மெண்டிஸ், மகரூப், பெர்னாண் டோ, குலசேகரா, மாத்தீவ்ஸ் மற்றும் துஷாரா.

"நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே, மற்றவர்கள் உங்களைப் பற்றி முடிவு செய்வர். எதை அழிக்கிறீர்கள் என்பதை பொறுத்தல்ல.

"பதவியேற்ற நூறு நாட்களுக்குள் முஸ்லிம் நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து உலக முஸ்லிம் மக்களுக்கு உரை நிகழ்த்துவேன்' என, அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்னைகளில், அமெரிக்கா மீது முஸ்லிம் நாடுகள் கடும் கோபம் கொண்டுள் ளன. அந்த நாடுகளிடமும், அங்கு வசிக்கும் மக்களிடமும் தனது சமாதான மற்றும் இணக்கமான குணத்தை காட்ட முற்பட்டுள் ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அதன் ஒரு பகுதியாக, துபாயைச் சேர்ந்த அல்- அரேபியா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: சமீபத்தில்தான் நான் பதவியேற்றேன். பதவியேற்ற நூறு நாட்களுக்குள் முஸ்லிம் நாடு ஒன்றின் தலைநகரில் இருந்து, முஸ்லிம் சமூக மக்களுக்கு உரை நிகழ்த்துவேன். வரக்கூடிய நாட்களில் முஸ்லிம் சமூகத்தினர் பயனடையும் வகையிலான பல நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே அமைதியை உருவாக்க எனது நிர்வாகம் ஆட்சிக்காலம் முடியும் வரை காத்திருக்காது. அதனால், எனது தேர்தல் பிரசாரத்தில் அளித்த உறுதி மொழிகளை காப்பாற்ற, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்காவின் தூதராக ஜார்ஜ் மிட்செல்லை அனுப்பியுள்ளேன்.



நாங்கள் இப்போது துவங்கியுள்ள இந்த நல்ல விஷயம் முடிவுக்கு கொண்டுவர நீண்ட நாட்களா கலாம். கியூபாவில் உள்ள குவாண்டனமோ சிறையை மூட முடிவெடுத்ததன் மூலம், எனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை முஸ்லிம் சமூகத்தினர் அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஈராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக அளித்த உறுதி மொழிகளையும் காப்பாற்றுவேன்.



அழிக்கும் வேலை: கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் அல்-குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதனால், அமெரிக்கா வீழ்ந்து விடவில்லை. அதிலிருந்தே, அல்-குவைதா தலைவர்களின் கொள்கைகள் எல்லாம் திவாலானவை என்பதை அறிந்து கொள்ளலாம். "நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே, மற்றவர்கள் உங்களைப் பற்றி முடிவு செய்வர். எதை அழிக்கிறீர்கள் என்பதை பொறுத்தல்ல. அதேபோல, அல்-குவைதா தலைவர்கள் எல்லாம், அழிக்கும் வேலையைதான் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இந்தப் பாதை அதிகளவிலான உயிரிழப்புகளையும், அழிவையும் ஏற்படுத்துமே அன்றி, அமைதியை உருவாக்காது. இதை முஸ்லிம் நாடுகளும் நன்கறியும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அந்நாடு முட்டியை உயர்த்தி சண்டைக்கு வந்தால், எங்களின் கையும் நீளும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பராக் ஒபாமா கூறியுள்ளார்.



அமெரிக்க நிதி அமைச்சர் இந்தியாவில் படித்தவர்: வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் புதிய அரசில், நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமோதி கெய்த்னர், டில்லியில் ஆரம்ப கல்வி பயின்றவர் என, தெரியவந்துள்ளது. இவர் அமெரிக்காவின் 75வது நிதி அமைச்சர். இவரின் தந்தை பீட்டர் எப். கெய்த்னர், போர்டு பவுன்டேஷனில் பல ஆண்டுகளாக பணியாற்றினார். அப்போது இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற பல ஆசிய நாடுகளில் பல பொறுப்புகளை வகித்தார். அவர் டில்லியில் தங்கியிருந்த போதுதான், திமோதி கெய்த்னர் அங்கு ஆரம்ப கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்காவில் பட்டப்படிப்பையும், முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார். சமீப நாட்கள் வரை நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக பணியாற்றினார்.



இலங்கைத் தமிழர் பாதுகாப்பு: ராஜபகஷேயிடம் பிரணாப் கண்டிப்பு

கொழும்பு: இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இ‌டையேயான போரில், அப்பாவித் தமிழர்கள் படுகொலை‌ செய்யப்படுவதைத் தடுத்து, அவர்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை அரசு உத்தரவாதம் தரவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இல்ஙகை அதிபர் ராஜபக்ஷேயிடம்‌ கேட்டுக் கொண்டார்‌.



முல்லைத்தீவு பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைந்து சென்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயைச் சந்தித்தார். மனிதாபிமான அடிப்படையில் அப்பாவித் தமிழர்களின் பாதுகாப்பிற்கு இலங்கை அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று அவர் அப்ப‌ோது, ராஜபக்ஷேயிடம் கேட்டுக் கொண்டார்.



அதற்கு ராஜபக்ஷே பதில் கூறுகையில், ‘நான் ஏற்கனவே தமிழக முதல்வரையும் எதிர் கட்சித் தலைவரையும் இல்ஙகை வருமாறு அழைத்திருக்கிறேன். அவர்கள் நேரில் வந்து இங்குள்ள நிலைமையைக் காணட்டும் என்றார்.



பின்னர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், அப்பாவித் தமிழர்க‌ளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்று இல்ஙகை அதிபர் ராஜபகஷேயிடம் வற்புறுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.

நட்பு-கவிதை

நட்பு
அவனும் அவளும்
நட்பின் பரந்த வெளியில்
கைகோர்த்து நடந்தனர்.

ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால்
உன்னதப் பொருளின் விரிதளத்தில்,
கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய்
அவ்விருவரின் முன் விரிந்தது உலகம்.

ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை
அறியாமல் இழிவாகப் பார்த்தன.
ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால்
நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை.

ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும்
மோகிக்கும் பாலியல் கண்கொண்டே
பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம்
வேறென்ன செய்யும்?

மீள எண்ணாத சமூக எச்சங்களாக,
அவன் காதல் மனையாளின் கண்ணீரும்,
அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும்
நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று.

கனத்த மனங்களுடன்...
சுருங்காத உன்னத விரிதளத்தில்
தொடர்ந்தும் நடக்க..

நட்பு என்னும் மானுட உணர்வை
சமுதாயப்பேய் கீறிக் கிழித்து
வேடிக்கை பார்த்தது.

நன்றி யாழ் இணையம்

இஸ்ரேல் 60

இஸ்ரேல-60





மத்திய கிழக்கில் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான வைர விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. வீதிகள் தோறும் பட்டாசு வெடிக்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புக்கள் சகிதம் கொண்டாட்டங்கள் களை கட்டின. இவை ஒரு புறம் நடைபெற மறுபுறம் கமாஸ் தீவிரவாதிகள் வைர விழா தாக்குதலை நடாத்தாது தடுக்க நாடளவியரீதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான பேச்சில் இஸ்ரேலிய பிரதமர் எக்குட் ஒல்மாற் கூறும்போது பாலஸ்தீன பிரச்சனையில் தாம் சிக்குண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதென்றும், இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவருடைய பதவிக்கு சவாலாக இருப்பதால் இவர் தனது காலத்தில் அமைதியை தொடுவார் என்று கருதப்படவில்லை. மறுபுறம் பாலஸ்தீனர் ஒரு பேருந்து வண்டியில் பெத்தலகேம் சென்று தமது தாய்மண்ணுக்கு என்றோ ஒருநாள் தாம் திரும்புவோம் என்று கோஷமெழுப்பினர்.

இஸ்ரேல் பிறந்த 60 வருட நினைவுகள் ஒரு புறம் நடைபெற அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சென்ற வாரம் இங்கிலாந்தில் கூடி பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவான தீர்வு அவசியம் என்றும், இதற்காக தயாரிக்கப்பட்ட றோட் மாப் எனப்படும் அமைதித் திட்டத்தை எவ்வாறு விரைவு படுத்துவது என்றும் பேசியுள்ளனர். அடுத்த வாரம் எருசெலேமில் நடைபெறும் 60 ஆண்டு நினைவு நிகழ்வுகளில் மறுபடியும் இப்பேச்சுக்கள் புதிய வேகத்தில் முடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

1948 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி பாலஸ்தீனர்களின் நிலத்தில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் உருவாக்கத்தாலும், நடைபெற்ற மோதல்களாலும் சிதறியோடிய 4.5 மில்லியன் பாலஸ்தீன மக்கள் இன்று உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி வாழ்கிறார்கள். அவர்களின் கண்ணீர் கதை முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு செல்கிறது.

1948ல் இஸ்ரேல் உருவானபோது அங்கு வெறும் 6.50.000 பேர் மட்டுமே இருந்தார்கள். இன்று அங்கு ஆறு மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்பட்டதும் உலகமெல்லாம் பரவியிருந்த யூதர்கள் விரைவாக நாடு திரும்பினர். சுமார் ஓர் இலட்சம் பேர் திரும்பினார்கள். அதுபோல ரஸ்யாவில் இருந்தும் ஓர் இலட்சம் பேர் நாடுதிரும்பினார்கள்.

இன்று பொருளாதாரத்தில், இராணுவ பலத்தில், அணு ஆயுத சக்தியில், உறுதி;பாட்டில் இஸ்ரேல் உலகம் திரும்பிப்பார்க்குமளவிற்கு முக்கியமான நாடாக இருக்கிறது. யூதர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைiயே நிர்வகிக்கும் நிலை உள்ளதால் அமெரிக்கா இஸ்ரேலின் அழுங்குப் பிடியில் இருந்து விலக முடியாத நிலையிலேயே இருக்கிறது. எவ்வளவுதான் இருந்தாலும் இஸ்ரேலில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே பாரிய இடைவெளி நிலவுவது அந்த நாட்டின் பாரிய பலவீனம் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.

இஸ்ரேல் என்ற நாடு உலகால் வெறுக்கப்படும் சியோனிச கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாக உள்ளது. சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யுதர்களைக் கொன்ற காயம் ஆறாவிட்டாலும் கூட யுதர்களை அழிக்காத பாலஸ்தீனர்களை அழிப்பதில் இஸ்ரேல் காட்டும் தவறான ஆர்வம் முன்னர் யூதர்கள் பட்ட அவலத்தை மறந்த போக்கு என்று கூறுவாரும் உண்டு.

இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் 1956 ம் ஆண்டு சினாய் பாலைவனத்தில் புகுந்தது, 1967 ல் எகிப்துடன் ஆறு தினங்கள் போர் புரிந்து வெற்றியீட்டியது, 1973 எகிப்துடன் மீண்டும் போர், 1977- 79 எகிப்துடன் சமாதானம் செய்தது, 1982 லெபனானுக்குள் நுழைந்தது, 1987 இன்டிபாட்டா எதிர்ப்பை ஆரம்பிக்கிறது, 1993ல் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்தானது, 2000 ல் பேச்சுக்கள் முறிந்து மீண்டும் போர், 2005ல் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றம், 2006 லெபனான் போர் என்று பத்து முக்கிய தடைகளை தாண்டி 60 வது ஆண்டு விழாவில் கால் பதித்துள்ளது.

இந்த 60 ஆண்டு வரலாற்றை தொகுத்து நோக்கினால் அயலில் உள்ள நாடுகள் எதனுடனும் நல்லுறவைக் கடைப்பிடிக்கும் நாடு என்ற பெயரை இஸ்ரேல் பெறவில்லை. இஸ்ரேல் என்ற நாடே உலகப்படத்தில் இருத்தல் கூடாது என்று கூறிய ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட்டின் கோபமும் அவருடைய அணு குண்டு தயாரிப்பு முயற்சியும் இன்னொரு அணுப் போருக்குள் இஸ்ரேலை வீழ்த்தக் கூடிய அபாயத்தில் முனைப்புற்று நிற்கிறது.

அமெரிக்காவின் பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கியை விட பலமுள்ள எஸ். 300 ஏவுகணை தகர்ப்பு பீரங்கிகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்குவது பிராந்தியத்தில் பாரிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவும் போலந்து, ருமேனியாவில் அணு ஏவுகணைகளை நிறுத்த முயல்வது இன்னொரு பதட்டமாக உள்ளது.

இத்தகைய பின்னணியில் அமைதியா ? அழிவா ? என்ற கேள்விக்கு பதிலே இல்லாத நிலையில் இஸ்ரேல் தனது அறுபதாவது ஆண்டை சந்திக்கிறது. என்னதான் இருந்தாலும் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் இன்னமும் கிடைத்துவிட்டதாகக் கூற முடியாது. நாளும் பொழுதும் அச்சத்துடன் வாழ்வதே அவர்களுடைய அவல வாழ்வாக உள்ளது. பாலஸ்தீனத்தில் சுதந்திர நாட்டை என்று இஸ்ரேல் ஏற்படுத்துகிறதோ அன்றுதான் இஸ்ரேல் சுதந்திரம் பெற்ற நாடாக மாறும் என்பதே உண்மையாகும். அச்சப்பட்ட அரசியலே இஸ்ரேல் நடாத்தும் படுகொலைகளுக்கு ஆதாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சனையானது அமெரிக்க அதிபர் புஸ்சின் காலத்தில் தீராவிட்டாலும் இஸ்லாமிய பின்னணி கொண்ட கறுப்பரான பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானால் புதிய வழிகள் பிறக்கும் என்றும் சிலர் எதிர் பார்க்கிறார்கள். பாலஸ்தீனத்தில் அமைதி வந்தால் இலங்கையில் அமைதி வருவதை எவராலும் தடுக்க முடியாத சூழல் உருவாகும் என்பதும் மறுக்க முடியாத உண்ம

Thanks for Alaikal.com

அழகிய புன்னகை



வரலாற்றால் சபிக்கப்பட்ட இரு நிலங்கள்

varalaru.jpg
வரலாற்றால் சபிக்கப்பட்ட இரு நிலங்கள். நவீன உலகைப் பின்னோக்கி இழுக்கும் இரு போர் வெறியர்கள். துப்பாக்கிகள், எறிகணைகள், வெடிகுண்டுகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ரத்தம், ஓலம், மரண ஓட்டம், சாவு…

வரலாறு நெடுக மேலாதிக்கத்தாலும் போர் அச்சுறுத்தலாலும் பீடிக்கப்பட்டவை காஸôவும் வன்னியும். ஏறத்தாழ ஒரே காலகட்டம். ஏறத்தாழ ஒரே பிரச்னை. ஏறத்தாழ ஒரே சூழல். ஆனால், அணுகுமுறைகளில் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள்.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஹமாஸýடனான போர்நிறுத்தத்தை தூக்கியெறிந்துவிட்டு காஸô மீதான தன் தாக்குதலை இஸ்ரேல் அதிபர் எஹுத் ஒல்மர்ட் தொடங்கினார். 22 நாள்களில் ஏறத்தாழ 1,200 உயிர்களைப் பலிகொண்ட பின்னர் ஒட்டுமொத்த சர்வதேச எதிர்ப்பின் விளைவாக போர்நிறுத்தத்தை இப்போது அறிவித்திருக்கிறார்.

இந்தப் போர்நிறுத்தத்துக்காக குரல் கொடுக்காதவர்கள் யாருமே இல்லை. போர் தொடங்கிய நாளிலிருந்தே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

ஐ.நா.சபையின் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தது. “”இந்தத் தீர்மானம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவு” என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீஸô ரைஸ். “”நான் பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முழுவீச்சில் தொடங்குவேன்” என்றார் தற்போது பதவியேற்றுள்ள அதிபர் ஒபாமா.

இஸ்ரேலால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அரபு நாடுகளின் வற்புறுத்தலின்பேரில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் போர்நிறுத்தத்தை ஐ.நா.சபை வலியுறுத்தியது. பான் கி மூன் லெபனான் சென்றார். ஐரோப்பிய ஒன்றியம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியது.

பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி எகிப்து அதிபர் முபாரக்கைச் சந்தித்தார். எஹுத் ஒல்மர்ட்டிடம் போரை நிறுத்தச் சொன்னார். இங்கிலாந்தும் சீனாவும் இந்தியாவும் இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்டித்தன.

அரபு நாடுகளில் தொடங்கி இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரவிய மக்களின் தன்னெழுச்சியான இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம் எகிப்து, கியூபா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்று உலகெங்கும் பரவியது. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியாவிலும்கூட காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசுகள் மெüனம் காக்க முற்பட்டபோதும் மக்களின் குரல் அரசாங்கங்களை அசைத்து மெüனத்தைக் கிழித்தது.

ஆனால், உலகின் இன்னொரு பக்கம் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்க ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 2008, ஜனவரி 17-ல் விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டார் ராஜபக்ஷ. இலங்கை அரசின் வன்னி மீதான போர் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டாகிவிட்டது. உயிரிழந்தோர், காயமடைந்தோர், காணாமல்போனோர் எண்ணிக்கை தெரியவில்லை. வன்னியின் ஒவ்வொரு நகரமும் ஆவி நகரமாகிக்கொண்டிருக்கின்றன.

முல்லைத்தீவில் சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே வாழக் கூடிய பரப்பளவில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் உயிரைக் கையில் ஏந்தி ஒளிந்திருக்கின்றனர். காடுகளிலும் கிராமங்களிலும் வெட்டவெளியில் ஆயிரக் கணக்கானோர் எவ்வித வசதியுமின்றி தங்கியிருக்கின்றனர். விஷ ஜந்துக்கள் கடிக்கு ஆளாகி மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் வன்னியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். மோட்டார் வாகனங்களில், மாட்டு வண்டிகளில், இரு சக்கர வாகனங்களில் எனக் கிடைத்த வாகனத்தில் சொந்த மண்ணையும் உடைமைகளையும் துறந்து பெட்டி, படுக்கையோடு வரிசையாய் அணிவகுத்துச் செல்லும் தமிழர்களால் யாழ்குடா செல்லும் பாதைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன.

ஆனால், இலங்கை அரசோ சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமரை நடத்திக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவைச் சுற்றி வளைத்திருக்கும் இலங்கை ராணுவம் தன்னுடைய பெரும்பகுதி வீரர்களையும் அங்கு குவித்துவருகிறது. தாக்குதலின் உக்கிரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் என எவ்விதப் பாகுபாடுமின்றி குண்டுவீச்சு தொடர்கிறது.

ஐ.நா. சபை, அமெரிக்காவின் புதிய அதிபர், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் ஈழத் தமிழர்கள் தனித்தனியே விடுத்த போர்நிறுத்த கோரிக்கை எவராலும் பொருள்படுத்தப்படவில்லை. “”இடம்பெயரும் பிரதேசங்கள் மீதான தாக்குதலையேனும் தாற்காலிகமாக நிறுத்த வேண்டும்” என்ற தமிழ் மக்களின் குறைந்தபட்ச உயிர்ப்பிச்சையையும்கூட ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார். “”மருத்துவமனைகள் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டும்” என்ற மருத்துவர்களின் வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டதால் போரில் தாக்குதலுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. இறந்தவர்கள் பலருக்கு இறுதிச் சடங்குகள்கூட நடப்பதில்லை.

இலங்கையில் இதற்கும் மேல் நிகழ வேண்டியது என்ன? ஒட்டுமொத்த உலகமும் இன்னமும் மெüனம் காக்கிறதே ஏன்? ஏனெனில், இலங்கையில் கொல்லப்படுவது தமிழர்கள்.

இந்த ஒரு காரணம்தான் இந்தியாவின் பிரதமர் முதல் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் வரை இஸ்ரேலுக்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு ஒரு நியாயமும் பேச வைக்கிறது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பொதுத் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறது; தம் சொந்த இனத்தவர் ஆயிரக்கணக்கில் உயிரழிய, குற்ற உணர்வற்ற மெüனத்தை தமிழர்களுக்குப் பழக்கி இருக்கிறது.

ஆறு கோடி தமிழர்களின் உணர்வைப் புறந்தள்ளி தன்னுடைய ரகசிய உதவிகள் மூலம் ஒரு வரலாற்றுக் குற்றத்தைத் திட்டமிட்டு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தன்னுடைய வெற்று வார்த்தைகள் மூலம் அந்தக் குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தம்முடைய ஓட்டு அரசியல் மூலம் மன்னிக்க முடியாத இனத் துரோகத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். இவை எல்லாவற்றையும் மெüனமாக கவனித்துக் கொண்டிருக்கிறது வரலாறு!

தினமணி