செவ்வாய், 27 ஜனவரி, 2009

நட்பு-கவிதை

நட்பு
அவனும் அவளும்
நட்பின் பரந்த வெளியில்
கைகோர்த்து நடந்தனர்.

ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால்
உன்னதப் பொருளின் விரிதளத்தில்,
கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய்
அவ்விருவரின் முன் விரிந்தது உலகம்.

ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை
அறியாமல் இழிவாகப் பார்த்தன.
ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால்
நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை.

ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும்
மோகிக்கும் பாலியல் கண்கொண்டே
பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம்
வேறென்ன செய்யும்?

மீள எண்ணாத சமூக எச்சங்களாக,
அவன் காதல் மனையாளின் கண்ணீரும்,
அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும்
நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று.

கனத்த மனங்களுடன்...
சுருங்காத உன்னத விரிதளத்தில்
தொடர்ந்தும் நடக்க..

நட்பு என்னும் மானுட உணர்வை
சமுதாயப்பேய் கீறிக் கிழித்து
வேடிக்கை பார்த்தது.

நன்றி யாழ் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக