கொழும்பு: இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான போரில், அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து, அவர்களுடைய பாதுகாப்பிற்கு இலங்கை அரசு உத்தரவாதம் தரவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இல்ஙகை அதிபர் ராஜபக்ஷேயிடம் கேட்டுக் கொண்டார்.
முல்லைத்தீவு பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விரைந்து சென்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயைச் சந்தித்தார். மனிதாபிமான அடிப்படையில் அப்பாவித் தமிழர்களின் பாதுகாப்பிற்கு இலங்கை அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்று அவர் அப்போது, ராஜபக்ஷேயிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு ராஜபக்ஷே பதில் கூறுகையில், ‘நான் ஏற்கனவே தமிழக முதல்வரையும் எதிர் கட்சித் தலைவரையும் இல்ஙகை வருமாறு அழைத்திருக்கிறேன். அவர்கள் நேரில் வந்து இங்குள்ள நிலைமையைக் காணட்டும் என்றார்.
பின்னர் பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், அப்பாவித் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்று இல்ஙகை அதிபர் ராஜபகஷேயிடம் வற்புறுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக