திங்கள், 16 மார்ச், 2009

உலக பணக்காரர்கள்

உலகப் பணக்காரர்கள் பட்டியல் வெளியானது மைக்கிரோ சொப்ட் முதலிடம் நாலு இந்தியர் முதல் பத்து இடங்களில் !

March 13, 2009

worldrig.jpg

உலகப் பணக்காரர்களின் வரிசையை வழக்கம்போல இவ்வாண்டும் வெளியிட்டிருக்கிறது போர்ப்ஸ் இதழ். இந்தப் பட்டியலில் 24 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 4 பேர் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். கலாநதி மாறன் 601 வது இடத்தில் !
மலேசிய தமிழர் அனந்தக் கிருஷ்ணன் 62 வது இடத்தில் !

கம்ப்யூட்டர் சாம்ராட் பில் கேட்ஸ் முதலிடத்தையும், அவருக்கு அடுத்த இடத்தை வாரன் பப்பெட் டும் பிடித்துள்ளனர்.

ஆர்சிலர் மிட்டலின் தலைவரும், இந்தியருமான லட்சுமி மிட்டல் (ரூ.2.25 லட்சம் கோடி) சொத்துடன் 4 ஆவது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.2.15 லட்சம் கோடியுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய சகோதரர் அனில் அம்பானி ரூ.2.1 லட்சம் கோடி சொத்துடன் 6ஆவது இடத்தில் உள்ளார். டிஎல்பி ரியல் எஸ்டேட் அதிபர் கே.பி. சிங் இந்தப் பட்டியலில் 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி.

01. பில்கேய்ட்ஸ்
02. வாரன் பஃக்பேட்
03. கார்லோஸ் சிலிம்
04. லோரன்ஸ் எலிசன்
05. இக்வார் கம்பாட் குடும்பம்
06. கார்ள் அல்பிரட்
07. முகேஷ் அம்பானி
08. லக்சுமி மற்றேல்
09. தியோ அல்பிரட்
10. அமன்சியோ ஒற்றேகா
62 இடம் ஆனந்த கிருஷ்ணன் மலேசியா
601 வது இடம் கலாநிதி மாறன் தமிழ்நாடு.

சரி, சரி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் எல்லாம் முன்னணி வகிக்கட்டும். வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் இவர்கள் இழந்தது எவ்வளவு தெரியுமா?

உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் இந்தக் கவலையையும் வெளியிட்டிருக்கிறது.

கடந்த வருட பட்டியலில் 1,125 கோடீஸ்வரர்கள் இருந்தார்கள். ஆனால், இவ்வருட கணக்கெடுப்பில் 793 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. மீதி 373 கோடீஸ்வரர்கள் எங்கே?

இந்த சரிவை, ‘வீணாய்ப் போன பணக்கார உலகம்’ என்கிறது போர்ப்ஸ்.

கடந்த வருடம் அடித்த பொருளாதார மழையில் 793 கோடீஸ்வரர்கள் மட்டுமே மிஞ்ச, 30 சதவிகித கோடீஸ்வரர்கள் கரைந்துபோய்விட்டனர்.காணாமல் போன கோடீஸ்வரர்கள் 18 பேர் இறந்துவிட்டனர். கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக 38 பேர் நுழைந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில் நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் காணாமல் போனது இதுதான் முதல்முறையாம்.

அதேசமயம் தற்போது உலகப் பணக்காரர்களான சித்திரிக்கப்படும் நபர்கள் உண்மையிலேயே (அவர்களைப் பொருத்தவரை) பணக்காரர்கள் அல்ல. கொஞ்சம் ஏழைகளாகிவிட்டவர்களதான். உலகப் பணக்காரர்களின் சொத்தாக இந்த வருடம் இருக்கும் தொகை 2.4 டிரில்லியன் டாலர். ஆனால், இந்தத் தொகை கடந்த வருடத்தை விட குறைவானது.

மீண்டும் முதல் இடத்தை பில் கேட்ஸ் பிடித்தாலும் 18 பில்லியன் டாலரை இழந்திருக்கிறார். கடந்த வருட முதல் பணக்காரர் வாரன் பப்பெட், பெர்க்ஷையர் ஹாத்ஹவே- யில் செய்திருந்த (25 பில்லியன் டாலர் வரை) பங்கு முதலீடு, கடந்த 12 மாதங்களில் 50 சதவிகிதம்வரை குறைந்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் உள்ள மெக்சிகோ டெலிகாம் அரசர் கார்லஸ் ஸ்லின் ஹெலு 25 பில்லியன் டாலர் வருமானத்தை இழந்திருக்கிறார்.

லாபகரமாக நிறுவனங்களை நடத்திவந்தாலும் கடந்த வருடம் ஏற்பட்ட உலக அளவிலான பொருளாதார சரிவு உலகப் பணக்காரர்களின் நிலையை மாற்றியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். கடன் வாங்குவதும், செலவு செய்வதும் குறைந்துபோனதும், பணபுழக்கம் இல்லாது போனதும் இதற்கு காரணங்கள்.

கடந்த வருடம் அதிக லாபம் பார்த்த, இந்த வருடம் அதிக நஷ்டடைந்தவர் யார் தெரியுமா? நம்ம அனில் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் என முக்கிய நிறுவனங்கள் அனில் அம்பானிக்கு 32 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளன.

கடந்த வருடத்தைவிட இந்த வருடம் கொஞ்சம் ஏழையான 24 இந்திய பில்லியனர்களில் அனில் அம்பானியும் ஒருவர். அதேநேரம் கடந்த வருட பட்டியலில் கோடீஸ்வரர்களாக இடம்பெற்ற 29 இந்திய தொழிலதிபர்கள் இவ்வருடம் காணாமல் போய்விட்டனர். ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை நமக்க அடுத்து நிலையில் சீனா உள்ளது. அங்கு 28 கோடீஸ்வரர்கள் வெறும் லட்சாதிபதிகளாகி விட்டார்கள்.

கடந்த ஆண்ட உலக கோடீஸ்வரர்களின் நகரமாக திகழ்ந்த மாஸ்கோ நகரில் (74பேர்) இப்போது 27 கோடீஸ்வரர்கள்தான் இருக்கிறார்கள். 71 கோடீஸ்வரர்களைக் கொண்டிருந்த நியூயார்க் நகரம் 24 பேரை இழந்து 55 பேராக குறைந்துவிட்டது.

பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை என்று அமெரிக்காவைப் பற்றி ஆயிரம் கதைகள் சொல்லப்பட்டாலும், கடந்த ஆண்டைவிட 110 சொச்சம் புதிய கோடீஸ்வரர்கள் அங்கே உருவாகி இருக்கிறார்கள்.
.
கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அஐஎ யின் முன்னாள் தலைவர் மெளரீஸ் க்ரீன்பெர்க், சிட்டிகுரூப்பின் முன்னாள் தலைவர் சாண்டி வெய்ல் ஆகியோரும் சரிவில் இருந்து தப்பவில்லை.

நிதி மற்றும் வங்கி சேவையில் ஈடுபட்டிருந்த 39 அமெரிக்கர்கள் கோடீஸ்வரர்களாக கடந்த ஆண்டு இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைந்துவிட்டது.

வருங்காலம் வளமாக தெரியாவிட்டாலும், பிளாக் ஸ்டோன் குரூப்பின் ஸ்டீபன் ஸ்குவர்ஸ்மென் 4கோடி டாலர் பணத்தை இழந்தாலும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறார். கோல்பெர்க் கிரேவிஸ் அண்ட் ராபர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹென்றி கிராவிஸ்க்கு 2.5 கோடி டாலர் நஷ்டம்தான் என்றாலும் தப்பி பிழைத்துவிட்டார்.

நிதி மற்றும் முதலீடு துறையில் ஈடுபட்டு கோடீஸ்வர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 355 பேரில் 80 பேர் கீழே விழுந்திருக்கிறார்கள்.

655 கோடீஸ்வரர்கள் அதிக நஷ்டத்தைக் கண்டிருக்கிறார்கள். 44 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள்புதிய கோடீஸ்வரர்களான 38 பேரில் மெக்சிகோவைச் சேர்ந்த காபி ஏற்றுமதியாளர் ஜோக்யுன் கஸ்மான் லோரா, சீனாவின் சுவான்ஃபூ (எலக்ட்ரிக் கார் ஏற்றுமதியாளர்), அமெரிக்காவின் ஜான் பால் டிஜோரியா (பால் மிட்செல் ஷாம்பூ) ஆகியோர் புதிய நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பணக்காரர்களின் பட்டியலை தூசுத்தட்டி எடுப்பது எளிது. ஏழைகளைப் பற்றி யாராவது பட்டியல் தயாரிக்க முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக